
யா/தனங்கிளப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ‘செயற்பட்டு மகிழ்வோம்’ நிகழ்வு பாடசாலை மைதானத்தில் இன்று(19) இடம்பெற்றது.
பாடசாலை முதல்வர் உலகநாதன் தனசங்கர் தலைமையில் இடம்பெற்ற ‘செயற்பட்டு மகிழ்வோம்’ நிகழ்வில், வரணி ஆசிரியர் வாண்மை விருத்தி மத்திய நிலைய விரிவுரையாளர் நீ.தவராசா, யா/ சாவகச்சேரி டிறிபேக்கல்லூரி அதிபர் செ. பேரின்பநாதன், தமிழ் இணையக் கல்விக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தருமான க.ரஜனிகாந்தன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில்,வினோத உடை, இசையும் அசைவும், சக்கர அஞ்சல் ஆகிய நிகழ்வுகள் சபையோரைக் கவர்ந்தன.