Tamilinfo

பிரித்தானியாவில் இன்று சுமார் 450,000 தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மரபுத்திங்கள்

பிரித்தானியாவில் இன்று சுமார் 450,000 தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 1940 களில் தமிழர்கள் ஐக்கிய இராச்சியத்திற்கு குடிபெயரத் தொடங்கினர். அப்போதிருந்து, பிரித்தானிய தமிழர்கள் மிகப்பெரிய தடைகளைத் தாண்டி, இந்த மாபெரும் தேசத்தின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு இந்த தை மாதம் ஒரு முக்கியமான மாதம். தமிழ் அறுவடை நாள் , பொங்கல், அத்துடன் பிற தமிழ் கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளும் நடைபெறும் மாதம் இது.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் இதை அங்கீகரித்து, தை மாதத்தை தமிழ் மரபுத்திங்களாக அறிவித்து ‘தமிழ் மரபுத்திங்கள் சட்டம், 2014’ ஐ நிறைவேற்றியுள்ளது.
பல தமிழ் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு அயராது உழைத்ததன் மூலம் இந்த பெரிய சாதனை சாத்தியமானது.

இன்று பிரித்தானியாவில் வாழும் தமிழ்மக்கள் தை2020 இல் இருந்து இந்த தை மாதத்தினை பிரித்தானியாவில்
தமிழ் மரபுத்திங்களாக ஏற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம்.

தமிழ் மரபுத் திங்கள் பிரகடனத்தின் நோக்கம்:

இதன் அடிப்படையில் தை திங்களை தமிழ் மரபுத்திங்களாக [அ] எம்மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளவும், [ஆ] பிரித்தானியாவில் பிரகடனப்படுத்துவதற்கான முயற்சியாக எமது இரண்டாவது நிகழ்வு ஒன்று இணைய வழியாக தைத்திங்கள் 16 மற்றும் 17ம் திகதிகளில் 2021 இல் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது . உங்கள் அனைவரையும் அன்புடனும் உரிமையுடனும் வரவேற்கின்றோம்.

எங்களுக்கு உங்களின் ஆதரவை காட்டும் முகமாக , தயவு செய்து இதை உங்களின் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்து விடுவீர்கள் என நம்புகின்றோம் ….

தமிழால் இணைவோம்
ஒன்றாய் எழுவோம்.