Tamilinfo

பல்லூடக எறிவை இயக்குனர்களுக்கான செயலமர்வு-2021

எமது கபிலர் சமூதாய மேம்பாட்டுப் பேரவையின் கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பிரதான செயற்பாடாகிய E-Learning முறைமையினை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிதிட்டத்தின் ஆரம்ப நிகழ்வான பல்லூடக எறிவை இயக்குனர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு 17.02.2021 எமது அலுவலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இச்செயலமர்வில் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள பௌதீக வள மற்றும் மனிதவள பற்றாக்குறை நிலவுகின்ற 20 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 பல்லூடக இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக திருகோணமலை உதவி மாவட்ட செயலாளர் திரு.N.பிரதீபன் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு திருகோணமலை மாவட்ட சமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி. J. சுகந்தினி அவர்களும்¸ மாவட்ட தனியார் தொண்டு நிறுவனங்களின் இணைப்பாளர் திரு. K. நிர்மலகாந்தன் அவர்களும் கலந்து கொண்டு தமது ஆரோக்கியமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர். இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் கருத்து தெரிவிக்கையில் தற்காலத்திற்கு மிகவும் பொருத்தமான முயற்சியினை கபிலர் முன்னெடுப்பதையிட்டு பெருமையடைந்ததோடு எமது நிறுவனத்திற்கு நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்தார்.

இப் பல்லூடக எறிவை இயக்குனர்களுக்கான செயலமர்வானது எமது நிறுவன தகவல்தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் செல்வன் கி.கிஷாந் அவர்களினால் நடாத்தப்பட்டதோடு இச்செயலமர்வில் பாடசாலைகளுக்கு பொறுப்பான தகவல்தொழிநுட்பஆசிரியர்கள்¸ பல்லூடக எறிவையினை கையாள இருக்கும் இளைஞர்¸ யுவதிகள் கலந்து கொண்டு நன்மையடைந்தனர்.

SEMINAR FOR MULTIMEDIA PROJECTOR OPERATORS-2021

Kabilar Social Advancement Council which is an organization focus on the development of the Education in North East and Upcountry.Our Education institution aiming to make a missive improvement on students in remote areas schools which is have less facilities.

Our organization selected 20 Schools from remote areas to donate Multimedia Projectors, Therefore we selected two representative from each Schools with the help of the school principals and gave one day training program on ” How to operate the Multimedia ” on 17th Feb 2021 at our office, and the seminar was conducted by our office staff Mr.K. Kishanth( IT Executive).

For this great we invite Mr.N.Pradeepan ( The Assistant District Secretary) and Mrs. Suganthini (District Social Services officer) as a guest.