யாழில் போதைப்பொருட்களுடன் 23 பேர் கைது!

யாழில் போதைப்பொருட்களுடன் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 17 வயது சிறுவன் ஒருவன் போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று(09) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, யாழ் நகரை அண்டிய பகுதிகளில் 10 பேர் ஐஸ் போதைப்பொருளுடனும்,17 வயது சிறுவன் உள்ளிட்ட 09 பேர், போதை மாத்திரைகளுடனும், 04 பேர் ஹெரோயின் போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version