Tamilinfo

தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான களவிஜயம்

வடகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த கற்றல் கற்பித்தல் வசதிகள் குறைந்த இருபது(20) பாடசாலைகள் முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்டு E-Learning முறைமையினை மேம்படுத்தும் நோக்கில் பல்லூடக எறிவைகளானது (Multi Media Projectors) கடந்த மாசி மாதம் எமது கபிலர் நிறுவனத்தினால் பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வாறு பல்லூடக எறிவைகள் வழங்கப்பட்ட பாடசாலைகளுக்கான நேரடியான களவிஜயமானது 17.03.2021 அன்று எமது நிறுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.

இவ்விஜயத்தின் போது பல்லூடக எறிவைக்கான திரை(Projector Screen)¸ இணையப்பாவனைக்கான Router மற்றும் ஒலிபெருக்கி (Speaker) என்பன ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் அன்பளிப்பு செய்யப்பட்டதோடு; பல்லூடக எறிவை இயக்குநர்களுக்கான நியமனக் கடிதங்களும் எமது அலுவலகர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.

இவ்வாறு எமது நிறுவனத்தின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் பணியாற்ற இருக்கும் பல்லூடக எறிவை இயக்குநர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளும்¸ இணையத்தள பாவனைக்கான மாதாந்த கட்டணங்களும் எமது கபிலர் நிறுவனத்தினால் 03 வருடங்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படும் என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.

Field Visit For Selected Schools

We Kabilar Social Advancement Council as an organization which is always focus on the development of the Education and we donate Multi media projectors for twenty (20) selected schools in remote areas in North and East of Srilanka on 18th of February 2021.

On 17th of March 2021 our office staffs made an field visits to this schools. During this visit we provide Projector’s Screens, Router and speakers for each schools and also we issued appointment letters for those who are going to work as a Multi media projector operators.

we are happy to mention here that we Kabilar Social Advancement Council will pay the salary for those who are working as a operators from selected schools and also our organization will pay the monthly bill for the Internet connection for three (03) years.

Follow us on

  1. Face Book Page:- https://www.facebook.com/KapilarEducationProject
  2. Twitter:-https://twitter.com/KabilarSocial
  3. Instagram:- https://www.instagram.com/kabilar_trinco/
  4. WhatsApp:- +9476-0037179