Tamilinfo

E-Learning முறைமை

மது இலங்கை நாட்டில் பின்தங்கியுள்ள பிரதேசங்களில் உள்ள மாணவர்களின் கல்வியினை நகர் புறபிரதேசங்களில் உள்ள மாணவர்களின் கல்வித் தரத்தோடு சமநிலையில் கொண்டு செல்வதற்கும் மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்றாற்போல் முகங்கொடுப்பதற்கு மாணவர்களினை தயார்படுத்துவதற்குமான புதிய முயற்சியினை எமது நிறுவனமாகிய Kabilar Social Advancement Council (Guarantee) Ltd இனால் மேற்கொள்ள தயாராகின்றோம்.

இவ் புதிய திட்டத்திற்காக பின்தங்கிய கிராமங்களில் உள்ள பாடசாலைகளினை இணம்கண்டு அவ்பாடசாலைகளிற்கு பல்நோக்கு ஊடக எறிவைகளினை (Multi Media Projectors) வழங்கி அவ் ஊடக எறிவைகளினூடாக YouTube இணையத்தின் தொழிநுட்பத்தின் உதவியுடன் நேரலை வகுப்புக்களினை (Live Classes) நடாத்த உத்தேசித்துள்ளோம்.

இவ் இணையத்தள வகுப்பினூடாக மிகச்சிறந்த ஆசிரியர்களினைக் கொண்டு கணிதம்¸விஞ்ஞானம்¸ஆங்கிலம் மற்றும் ஏனைய பாடங்களினை இலகுவாக மாணவர்களுக்கு புரியும் வண்ணம் புதிய யுத்திகளினை கையாண்டு கற்பிக்க எதிர்பார்க்கின்றோம்.

இது மட்டுமல்லாது தவணைப் பரீட்சைக்கான தயார்படுத்தல்கள்¸ கடந்த கால வினாப்பத்திரங்களுக்கான விளக்கங்கள் மற்றும் போட்டிப் பரீட்சைக்கு முகம் கொடுக்கும் பரீட்சாத்திகளுக்கான வகுப்புக்களினையும் இவ் தொழிநுட்ப வசதியினூடாக வழங்க எதிர்பார்க்கின்றோம். நேரடி வகுப்புக்கள் மாத்திரமன்றி கல்வி சம்மந்தமான அனைத்து Video பதிவுகளையும் நாம் இவ் YouTube Channel னூடாக பதிவேற்றவுள்ளோம்.

Kabilar Social Advancement Council இன் புதிய தடமான இவ் திட்டமுறைமையினை ஆரம்பிக்கவுள்ளதால் எமது YouTube channel ஆகிய Kapilar E-Learningsubscribe செய்து உங்கள் ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

YouTube Link:- https://www.youtube.com/watch?v=Wkg-BVb-Cq0