யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற திருவிழா இன்று (13) அதிகாலை 1:45 மணியளவில் இடம்பெற்றது.
செல்வச் சன்நிதியான் கொடியேற்றத்தை காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அடியவர்கள் வருகை தந்திருந்தனர்.

திருவிழாவிற்கு வருகை தருகின்ற அடியவர்களின் நலன் கருதி சுகாதார, குடிநீர் உட்பட்ட வசதிகளை வல்வெட்டித்துறை நகர சபை மேற்கொண்டுள்ளதோடு விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, தேர் திருவிழா எதிர்வரும் 27 ம் திகதியும், தீர்த்த திருவிழா 28 ஆம் திகதியும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்னடத்தை பாதுகாவல் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் நியமனம்!
யாழ்.வல்லை வீதிவிபத்தில் ஆலய பூசகர் பலி!
டில்லு குழுவினருக்கு 9 ஆம் திகதிவரை விளக்கமறியல்!
அனோஜனுக்கு மன்னிப்பு வழங்க கோரி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவுதி அரேபிய மன்னருக்கு கடிதம்!