மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசியப் பகுதியில் வேகமாக மோசமடைந்து வரும் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளதோடு, பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளது.

பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று(15)வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் அனைத்துத் தரப்பினரும், பொதுமக்களை பாதுகாப்பது அடிப்படைப் பொறுப்பாகும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், எந்த ஒரு நாட்டின் நில அகிலத் தன்மையையோ, அரசியல் சுயாதீனத்தையோ எதிர்த்து வன்முறையை பயன்படுத்தக்கூடாதெனக் எனக் கூறும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அடிப்படை கொள்கைகளை மதிக்க வேண்டிய அவசியத்தையும் அது வலியுறுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அதிகபட்ச அமைதியைக் கடைப்பிடித்து, பதற்றம் மேலும் அதிகரிக்காமல் இருக்க மீண்டும் பேச்சுவார்த்தைகளுக்கு திரும்ப வேண்டும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.
அதேபோல், பிராந்தியத்திலும் உலகளவிலும், அமைதி மற்றும் நிலைத்தன்மையை பாதுகாக்கும் வகையில் அர்த்தமுள்ள பேச்சுவார்தைகளில் ஈடுபட நடவடிக்கைகளை எடுக்க அனைத்து தரப்பினரிடமும் இலங்கை அரசு வேண்டுகோள்விடுத்துள்ளது.

விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!
ஞானசார தேர்ரின் பொதுமன்னிப்பை வலுவிழக்கச் செய்து தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம்!