இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச்சென்ற படகு யாழில் மீட்பு!

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கு வழங்கப்பட்ட படகு யாழ்.அராலித்துறையில் மீட்க்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மீட்ட படகை, யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

இஷாரா செவ்வந்திக்கு படகு வழங்கிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை ஆனந்தன், கொழும்பு-கண்டி திஹாரிய ஒகொடபொல பகுதியில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் வழங்கிய தகவலின்பேரில், இரண்டு கைத் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் மீட்க்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கு வழங்கப்பட்ட படகும் மீட்க்கப்பட்டுள்ளது.

Exit mobile version