மகளிர் உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்குள் வந்துள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்றஇந்தப் போட்டியில், முதலில் துடுப்படுத்தாடிய அஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 338 ஓட்டங்களை எடுத்தது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, சிறப்பான ஆட்டத்தின் மூலம் 48.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 339 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கை அடைந்தது.
இந்திய அணிக்காக ஜெமிமா ரொட்ரிக்ஸ் ஆட்டமிழக்காமல் 127 ஓட்டங்களை விளாசி இந்திய வெற்றியின் நாயகியாக திகழ்ந்தார்.
அதேசமயம் தலைவி ஹர்மன்பிரீத் கவுர் சிறப்பாக 89 ஓட்டங்களை குவித்தார்.

இந்த வெற்றியுடன், இந்தியா தற்போது மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்தப்போட்டி நாளை மறுதினம்( 02) இடம்பெறவுள்ளது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு!
கனடா நாட்டின் இராணுவ சிறப்பு விருதினை பெற்றுக் கொண்ட ஈழத்தமிழன்.
கலைஞர் கெளரவிப்பும் திரையிசை வெளியீடும்!
நெகிழவைக்கும் நிமிடம்