குறைந்தளவு மழை பெய்தால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் – இலங்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனப் பணிப்பாளர் எச்சரிக்கை!

நாட்டில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் மண் நிரம்பியுள்ளதால், குறைந்த அளவு மழை பெய்தாலும் மன்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக இலங்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனப் பணிப்பாளர் காமினி ஜெயதிஸ்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த எச்சரிக்கை விடுத்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் தரையிலுள்ள மண் இப்போது நிரம்பி, தண்ணீர் போல் பாயும் நிலமையை எட்டியுள்ளது. இதனால் நிலச்சரிவு ஏற்பட சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவு ஏற்படக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் தற்போது மண்சரிவு, பாறைசரிவு ஏற்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

நிலையற்ற இடங்களிலும் தங்காமல், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள். உரிய அதிகாரிகள் அனுமதி அளித்த பிறகு உங்கள் இடங்களுக்கு திரும்பலாம்.

ஆபத்தான மற்றும் சந்தேகிக்கப்படும் நிலச்சரிவு இடங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் உள்ளடக்கிய நியமிக்கப்பட்டுள்ளது” – என்றார்.

Exit mobile version