இந்தியன் பிரீமியர் லீக் ஆறாவது போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி, 65 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தா ஈடன் ஹார்டன் மைதானத்தின் நேற்று(02) இரவு இடம்பெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய முதலில் துடுப்படுத்தாடிய ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 226 ஓட்டங்களை பெற்றது.


ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி சார்பாக, ஹெய்ன்ரிக் கிளாசன் 52 ஓட்டங்களையும், அபிஷேக் ஷர்மா 48 ஓட்டங்களையும்,
டிராவிஸ் ஹெட் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு 227 என்ற வெட்டி இலக்கை நோக்கி துடிப்படுத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 16 ஆவது ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 161 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக, அங்க்ரிஷ் ரகுவன்ஷி 52 ஓட்டங்களையும், ரிங்கு சிங் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதன் மூலம் இந்தியன் பிரீமியர் லீக் ஆறாவது போட்டியில், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 65 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை தான் விளையாடிய இரு போட்டிகளிலும், தோல்வியை தழுவியுள்ளதோடு, ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி தான் விளையாடிய இரு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிரடியாக உயர்ந்த கச்சா எண்ணை விலை!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப் பொருளோடு ஒருவர் கைது!