மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் நிலவிவரும் சூழலில், இந்தியாவிற்குச் சொந்தமான இரண்டு எரிவாயு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் பாதுகாப்பாகக் கடந்துள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுமார் 94 ஆயிரம் மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல்களே இவ்வாறு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துள்ளன.

குறித்த கப்பல்கள் இந்த வார இறுதியில் மும்பை வந்தடையவுள்ளது.
தற்போது வரை 6 இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணைக் கடல்வழிப் பாதையைக் கடந்துள்ளன.
மேலும் 18 கப்பல்களும், 485 இந்திய மாலுமிகளும் அப்பகுதியில் பாதுகாப்பாகவுள்ளதாக இந்திய பெற்றொலிய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் 60 சதவீத எரிவாயு தேவை, இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றன.

40 நாடுகளுக்கு இலவச வீசா : இன்று முதல் நடைமுறையில்!
இந்தியன் பிரீமியர் லீக் கின் 68 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி!
இந்தியன் பிரீமியர் லீக் 66 வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி!
வாகன இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு: அமைச்சரவை அதிரடி முடிவு!