ஈரானின் புரட்சிகர காவல்படை, நீண்ட தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக பரிசோதித்ததாக அறிவித்துள்ளது.
அந்த ஏவுகணை சுமார் 9ஆயிரத்து 800 முதல் 10 ஆயிரம் கிலோமீற்றர் வரை கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய திறன் கொண்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.


இந்த தூர வரம்பு உண்மையானதாக இருந்தால், அமெரிக்காவின் தலைநகர் Washington உட்பட அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளின் பெரும் பகுதியும் அதன் தாக்குதல் எல்லைக்குள் வரக்கூடும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் வெளியிட்ட தகவலின்படி, இந்த சோதனை அதன் நீண்ட தூர ஏவுகணை திறனை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த சோதனை குறித்த தகவல்கள் தொடர்பாக சர்வதேச பாதுகாப்பு வட்டாரங்கள் இதுவரை முழுமையான உறுதிப்படுத்தலை வெளியிடவில்லை.
இதற்கு முன்பு ஈரானிடம் சுமார் 2 ஆயிரம் கிலோமீற்றர் தூரம் செல்லக்கூடிய நடுத்தர ஏவுகணைகள் மட்டுமே இருப்பதாக பல பாதுகாப்பு ஆய்வுகள் தெரிவித்திருந்தன.

மத்திய கிழக்கில் போரை நிறுத்தக்கோரி அனைத்துத் தரப்பினரிடமும் ஐநா வேண்டுகோள்!
ஈரானிய கடற்படையின் சடலங்கள் தூதரகத்திடம் ஒப்படைப்பு!
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல, இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி இல்லை: ஈரான் அறிவிப்பு!
இஸ்ரேலுக்கான தூதுவரை திரும்பப் பெறுவதாக ஸ்பெயின் அறிவிப்பு!