சிலியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால்18 பேர் உயிரிழந்துள்ளதோடு 100க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.
சிலியின் தலைநகர் சாண்டியாகோவிற்கு தெற்கே சுமார் 500 கிலோமீற்றர் தொலைவிலுள்ள உபிள் மற்றும் பயோபியோ பகுதிகளிலேயே காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, கடலோர நகரமான கான்செப்சியனை ஒட்டிய வறண்ட காடுகளில் தீ இடைவிடாமல் எரிந்து வருவதால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் போராடி வந்தாலும் பலத்த காற்று காரணமாக தீயை அணைக்கும் பணியில் சிக்கல் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கடல்மட்ட உயர்வால் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஆபத்து – ஐ.நா. எச்சரிக்கை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
காஷ்மீர் குறித்த அமெரிக்கத் தூதரின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்!