சிவராத்திரி தினத்தை முன்னிட்டு யாழ் நாவற்குழி சிவபூமி திருவாசக அரண்மனை சிவ தட்சணாமூர்த்தி ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.


ஈழத்தின் தென்மராட்சி பதியில் புகழ் பூத்த ஆலயங்களில் ஒன்றான சிவபூமி திருவாசக அரண்மனை சிவ தட்சணாமூர்த்தி ஆலயம் திகழ்கிறது.


ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீரால் சிவலிங்க பெருமானை நீராட்டி 108 லிங்கமாக வீற்றிருக்கும், சிவபெருமானிடம் தங்களின் நேத்தி கடன்களை நிறைவு செய்து வருகின்றனர்.


ஆலயத்தில் 108 சிவலிங்க மூர்த்திகள் நந்தியம் பெருமானோடு காட்சியளிக்கின்றனர்.
வாசலிலே கருங்கல் தேரிலே சிவலிங்கப் பெருமானும், மாணிக்கவாசகப் பெருமானும் காட்சி அளிக்கும் அற்புத தளமாக இத்தளம் விளங்குகிறது.


ஆலய சுவர்களில் திருவாசகம் கல்வெட்டுக்களாக பொறிக்கப்பட்ட சிறப்புமிக்க தலமாகவும் இத்தலம் விளங்குகிறது.



வெல்லே சாரங்க துயாயில் கைது!
காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழில் நீதிக்கான பயணமும் மாநாடும்!
வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!