யாழ் தீவகத்தின் நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் குமுதினி படகு நாளை(04) முதல் இணைக்கப்படுவதால் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,
குமுதினி படகு காலை 6.15 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கியும், காலை
8.00 மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கியும் சேவையில் ஈடுபடவுள்ளது.
மேலும், பிற்பகல் 2.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கியும், பிற்பகல் 3.30 மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கியும் தனது நாளாந்த சேவையில் ஈடுபடவுள்ளது.

இதேவேளை,
நெடுந்தாரகை படகு காலை 7.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கியும், காலை 8.30 மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோகியும் தனது சேவையில் ஈடுபடவுள்ளது.
அத்துடன் வடதாரகை படகு பிற்பகல் 3.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கியும், பிற்பகல்
4.30 மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கியும் சேவையில் ஈடுபடவுள்ளது.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தமிழ் மொழி மூலத்தில் யாழ் மாணவன் முதலிடம்!
22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான உயர் நீதிமன்ற பரிசீலனைகள் நிறைவு – வியாக்கியானம் சபாநாயகருக்கு!
தலவத்துகொட கொள்ளை தொடர்பாக நால்வரைத் தேடும் பொலிஸார்!