ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல, இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கையை ஈரான் ஜனாதிபதி ‘மசூத் பெசஷ்கியான்’ நிராகரித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நெருங்கிய உறவு கொண்ட நாடுகளின் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும்,”இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளது” என சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களையும் அவர் மறுத்துள்ளார்.

அத்துடன் இந்தியாவிலிருந்து வந்ததாக கூறப்படும் ஒரு கப்பல் போர் தொடங்குவதற்கு முன்பே ஹார்முஸ் ஜலசந்தியை கடந்திருந்ததாகவும் ஈரானிய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கடல்மட்ட உயர்வால் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஆபத்து – ஐ.நா. எச்சரிக்கை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
காஷ்மீர் குறித்த அமெரிக்கத் தூதரின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்!