தென் மறவர்களின் போர் நாளை ஆரம்பம்!

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரிக்கும், மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான “தென் மறவர்களின் போர்” என பெயர் சூட்டப்பட்ட “வற்றில் ஒப்த தென்மறவர்” கிரிக்கெட் தொடர் நாளை(31) ஆரம்பமாகவுள்ளது.

தென்மராட்சி மண்ணில்,150 வருடங்கள் பழமை வாய்ந்த டிறிபோக்கல்லூரிக்கும், 100 வருடங்கள் பழமைவாய்ந்த மீசாலை வீரசிங்கம் மத்தியகல்லூரிக்கும் இடையில் முதல் தடவையாக இந்த தொடர் இடம்பெறவுள்ளது.

இந்த தொடருக்கான வெற்றிக்கிண்ணம் மற்றும் சீருடை அறிமுக நிகழ்வு சாவகச்சேரி டிறிபேக்கல்லூரியில் இன்று(30) இடம்பெற்றது.

Exit mobile version