யாழ். தென்மராட்சி ஏ9 வீதி உசன் பகுதியில் அரச பேருந்தும்,ஆட்டோவும் மோதுண்டு விபத்துக்குள்ளாகின.
இந்த சம்பவம் நேற்று(11) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்பாணத்துக்கு பயணிகளுடன் பயணித்த அரச பேருந்து உசன் பகுதியில் பயணிகளை இறக்கியபோது பின்னால் பயணித்த ஆட்டோ பேருந்துடன் மோதுண்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த ஆட்டோ சாரதி உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Follow Us



