வடக்கு மாகாண தாதியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்!

வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படல் கையொப்பங்கள் ஏனைய ஊழியர்களுடன் சேர்ந்ததாக பயன்படுத்துதல்” என்ற வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளரின் முடிவுக்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

இன்று(12) காலை 7.00 மணியளவில் ஆரம்பமாகிய வேலை நிறுத்தப் போராட்டம் நாளை காலை 7.00 மணிவரை இடம்பெறவுள்ளது.

அதற்கமைய சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் தாதியர்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் காரணமாக வைத்தியசாலைக்கு வயது வந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

Exit mobile version