யாழ்.தென்மராட்சி மீசாலை வடக்கு, சுடர் ஒளி பாலர் பாடசாலையின் கலை விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் மீசாலை மேற்கில் அமைந்துள்ள பரமேஸ்வரி மணிமண்டபத்தில் நேற்று (20) இடம்பெற்றது.



முன்பள்ளி முகாமைத்துவ குழு தலைவி தீ.மதுசனா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், சட்டத்தரணியுமான கே.சயந்தன், சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சமுதாயசீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தரும், தமிழ் இணையக் கல்விக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான க.ரஜனிகாந்தன், பொது சுகாதார பரிசோதகர் தெ.கலைவாசன், சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் அ. பாலமயூரன் மற்றும் சுடர்ஒளி சனசமூகநிலைய செயலாளர் கு.தனுசன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தனர்.



இதன்போது பாடசாலை செல்லவுள்ள முன்பள்ளிச் சிறார்கள் கெளரவிக்கப்பட்டனர். மேலும், நிகழ்வில் சிறார்களால் நிகழ்த்தப்பட்ட “அன்றும் இன்றும்”, “கிராமிய நடனம்”, “ஆகியன சபையோரைக் கவர்ந்தன.



கிளிநொச்சியில் குளங்கள் வான் பாய்கின்றன!
உலக தமிழாராட்சி மாநாட்டு படுகொலையின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு!
அரியாலையில் ரயிலுடன் மோதுண்டு இளைஞர் படுகாயம்!
மின் கம்பத்தோடு மோதுண்டு அம்பியூலன்ஸ் விபத்து: இருவர் காயம்!