கண்டி – மாத்தளை வீதியிலுள்ள அலவத்துகொடை – ரம்புக்கெள பிரதேசத்தில் நவம்பர் 29 அதிகாலை 1.00 மணியளவில் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
அங்கும்புர – அலவத்துகொடை வீதியில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்ததால் கிராமமே மண்ணில் புதையுண்டது.
நடுநிசி ஊரே தூக்கத்தில் அயர்ந்து போயிருந்த ஒரு தருணம். நள்ளிரவு 1.00 மணியளவில் சுமார் 50 வீடுகளையும் அதில் உறக்கத்தில் இருந்த 50 குடும்பங்களையும் மரணம் விழுங்கிய துயரத்தை எண்ணிக்கூட பார்க்க முடியாதுள்ளது.
50 குடும்பங்களை சேர்ந்த 150 மேற்பட்டவர்களைக் கொண்ட கிராமமே கரையுண்டு போனது.
இதுவரை இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த பலருடைய சடலங்கள் மீட்க்கப்பட்டாலும், மேலும் 150 க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதையுண்டனர்.
கிராமத்தின் மக்கள் உறக்கத்தில் உறைந்து போயிருந்த கணம், சுற்று முற்றும் இருந்த பாறைகளும் மண்மேடுகளும் அவர்கள் மீது சரிந்து விழும் என அவர்கள் தமது கனவில் கூட கண்டிருக்கமாட்டார்கள்.
கடும் மழையால் பிடிமானம் இழந்திருந்த மண்மேடுகள் சரிந்து வந்து அவர்களது வீடுகளை முழுவதுமாக விழுங்கிக் கொண்டது.
உள்ளே குழந்தைகள், முதியோர்கள், நோயாளர்கள் எல்லோரும்தான்.
நீரில் கசிந்து வீடுகளில் வீழ்ந்த மண்மேடுகள் பெரும் பெரும் வீடுகளைக் கூட முழுமையாக மூடிக் கொள்கின்றன.
மக்கள் மூச்சுக்காற்றை மட்டுமன்றி முகவரியைக் கூட இழந்த பரிதாபம்.
யாரும் உடனடியாகச் சென்று உதவ முடியாதவாறு பாதைகள், சிறு வீதிகள் எல்லாமே சிதைந்து போனது.
அதனால் பல மணித்தியாலங்கள் இந்த கிராமம் உலகப்பார்வையிலிருந்தே துண்டிக்கப்பட்டது. அதன்பிறகே மக்கள் அங்கே படையெடுக்கிறார்கள்.
ஆனால் யாருக்கும் எதுவுமே செய்ய முடியாத நிலை. அந்தப் பிரமாண்டமான மண் சரிவுக்கு முன்னால் அவர்கள் கண்ணீர் மட்டுமே சிந்த முடிகிறது.
மீட்புக்குழுக்கள் முழு மூச்சாக முயன்றதில் சுமார் பத்துப்பேரின் உடல்கள் மட்டுமே ஆரம்பத்தில் அகழ்ந்தெடுக்க முடிந்தது. அதற்கு மேல் எதுவுமே செய்ய முடியாத நிலை!
கையறுநிலையாக கண்கலங்கி நிற்கிறோம்! காணாமல் போனவர்களை காணும் வரை…!

மாணவர்களுக்கு கல்வி உதவியைப் பெற்றுக்கொடுக்க புதிய வங்கிக் கணக்குகள் அறிமுகம்!
திருக் கார்த்திகை விளக்கீடு