பண்பாட்டு பெருவிழாவும் கண்காட்சியும்!

பாரம்பரிய முறைப்படி விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, பழமை வாய்ந்த பொருட்கள், கலைஞர்களின் ஓவியங்கள் மற்றும் நூல்கள் அடங்கிய கண்காட்சிக் கூடத்தை விருந்தினர்கள் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில், தமிழ் மக்களின் பாரம்பரிய வாள் நடனம் மற்றும் கரகாட்டம் ஆகியவற்றுடன் எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலய மாணவிகளின் இஸ்லாமிய ‘ஹசீதா’ கலை வடிவமும், வவுனியா தெற்கு துஸ்யந்த கலைமன்றத்தின் சிங்கள ‘கண்டிய நடனமும்’ ஒரே மேடையில் அரங்கேற்றப்பட்டன.

இந்தநிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கூட்டுறவுத்துறைப் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

Exit mobile version