மிகச்சிறந்த தடகள வீராங்கனையாக திகழும் அமாஷி டி சில்வா!

இலங்கையின் மிகச் சிறந்த தடகள வீராங்கனைகளில் ஒருராக அமாஷி டி சில்வா திகழ்கின்றார்.

1999 ஆகஸ்ட் 12ஆம் திகதி கண்டியில் பிறந்தார்.

இவர் சஸ்வர்ணமாலி மகளிர் கல்லூரியில் கல்வி பயின்றார். ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் விளையாட்டு அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்.

இலங்கையின் வரலாற்றில் 100 மீற்றர் ஓட்டத்தில் நான்காவது வேகமான வீராங்கனை என்ற சாதனை படைத்தவர்.

இவர் 2021 ஆம் ஆண்டு இராணுவ தடைகளை சாம்பியன் ஷிப்பில் 100 மீற்றர் ஓட்டத்தை 11. 67 வினாடிகளில் கடந்து 24 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த சுசந்திகா ஜெயசிங்கவின் சாதனையை முறியடித்தார் .

2018 இல் தெற்காசியா ஜூனியர் சாம்பியன் ஷிப்பில் நான்கு தங்க பதக்கங்களை வென்றவர்.

2025 தெற்காசிய தடகள சாம்பியன் ஷிப் இரண்டு போட்டிகளில் வெள்ளி பதக்கத்தையும் தங்கப்பதக்கத்தையும் வென்றிருக்கிறார்.

தற்போது இவர் இராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

Exit mobile version