இலங்கைக்கு எப்போதும் உதவத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள ஈரானிய தூதரகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை ஈரானுக்கு நட்பு நாடாக இருக்கிறது. ஆகையால், எரிபொருள் அல்லது வேறு அத்தியாவசியப் பொருட்களைக் கோரினால், அவற்றை வழங்க ஈரான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஈரான் ஒருபோதும் ஹோர்முஸ் நீரிணையை தனது நட்பு நாடுகளுக்கு மூடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால், மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனாவில் இருந்த கடற்படையினரை எமது கோரிக்கைக்கமைய பேரில் மீட்க இலங்கை மீட்கப்பட்டமையும் இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் இதன்போது நினைவு கூர்ந்தார்.

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் குறையாது: தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம் யாழில்!
வடக்கு மாகாணத்தில் 70.1 சதவீதமானோர் உயர்தரத்துக்குத் தகுதி: 566 மாணவர்கள் 9 ‘ஏ’ சித்திகள்!
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை!