இலங்கையின் பிரதமராக மிளிரும் ஹரிணி அமரசூரிய!

ஹரிணி அமரசூரிய இலங்கையின் தற்போதைய பிரதமராகவும், கல்வியாளர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளராகவும் விளங்குகின்றார்.

பிரதமராவதற்கு முன்னர், பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றினார்.

2020 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் மூலம் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, செப்டம்பர் 2024 இலங்கையின் முதல் பெண் பிரதமர்களில் ஒருவராக பதவியேற்றார்.

ஹரிணி 1970 இல் மார்ச் 6ஆம் திகதி காலியில் பிறந்தவர்.

இவர்,தேசிய மக்கள் சக்தி கட்சியின் முக்கிய உறுப்பினராக திகழ்கிறார்.

இலங்கையின் வரலாற்றில் பிரதமரான முதல் சில பெண்களில் ஒருவராகவும் ,2000 க்கு பிறகு பிரதமரான முதல் பெண்மணியாக திகழ்கின்றார்.

பிரதமரானதை தொடர்ந்து கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகவும் பொறுப்பேற்று நாட்டுக்கு அளப்பரிய சேவையாற்றிவருகிறார்.

Exit mobile version