சிறையில் பூத்த சின்ன மலர் ஒன்று உலகின் முன்னணி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக திகழ்கிறது.
ஈழதேசம் சித்திய கண்ணீரில் உதித்த சூரியனாக அவள் இன்று வெளிச்சம் தருகிறாள்!
கிளிநொச்சி
வட்டக்கட்சியை தாயகமாக கொண்ட சாதனைப் பெண் ராஜினி சந்திரசேகரமே அந்த சிறையில் பூத்த சின்ன மலர்!

போர் சூழலால் ராஜினியின் பெற்றோர் தங்களைக் காப்பாற்றும் நம்பிக்கையில் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தனர்.
அங்கு கூட அவர்களுக்கு நிம்மதி கிடைக்கவில்லை. சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையின் சுவர்களுக்குள் பிறந்தாள் ராஜினி!
போராட்டத்தில் இணைந்திருந்த தந்தையின் உடலில் ஏற்பட்ட காயங்கள், அறுவைச் சிகிச்சையை தொடர்ந்து ஏற்பட்ட வலிப்பு, இவையனைத்தும் சிறுமியான ராஜினியின் மனதில் மனித மூளை எப்படி செயல்படுகிறது? இந்த வலியை தடுக்க முடியாதா? என்ற எண்ணற்ற கேள்விகள் எழுந்தன.
அந்தக் கேள்விகளே அவளின் வாழ்க்கைப் பாதையை தீர்மானித்தன.

பின்னர் ராஜினியின் குடும்பம், பிரித்தானியாவில் தஞ்சம் அடைந்தது.
அங்கு பொருளாதார சிரமங்களையும், மன உளைச்சல்களையும் கடந்து, கல்வியிலே முழுமையாக கவனம் செலுத்திய ராஜினி, உலகப் புகழ்பெற்ற கேம்பிறிச் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் (Neuroscience) துறையில் கல்வி கற்றார்.
பத்து ஆண்டுகள் கடின உழைப்பும் தீவிர ஆராய்ச்சியும் அவரை நரம்பியல் துறையில் முனைவர் பட்டம் பெறவைத்தது.

மூளை மற்றும் நரம்பியல் குறித்து ஆழமான புரிதலை வழங்கும் அறிவியல் நூலையும் வெளியிட்டார்.
இன்று அதே “கேம்பிறிச் பல்கலைக்கழகத்தில்” விரிவுரையாளராக பணியாற்றி, அடுத்த தலைமுறைக்கு அறிவை பகிர்ந்து வருகிறார்.
துயரங்கள் பல கடந்து உயரங்களை எட்டிய ராஜினி சந்திரசேகரத்தை மங்கையர் அரங்கத்தின் சார்பாக வாழ்த்துவதில் பெரு மகிழ்வடைகிறோம்!

ஈரான் கப்பலை தாக்கியதை உறுதிப்படுத்திய அமெரிக்கா!
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து அறிவிப்பு!
தென்னாபிரிக்காவை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து அணி!
ஆபிரிக்காவில் இருந்து ஈரானுக்கு ஆதரவு!