இலங்கையின் முதல் பெண் பாதுகாப்பு மார்ஷல்!

இலங்கையின் சிவில் விமானப் பாதுகாப்புத் துறையில் வசந்தி முருகேசு முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Airport & Aviation Services Sri Lanka நிறுவனத்தினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தப் பதவியில் முதல் பெண்ணாக வசந்தி முருகேசு வரலாறு படைத்துள்ளார்.

பெண்களின் பங்களிப்பையும், பாலின சமத்துவத்தையும் முன்னேற்றும் முக்கிய மைல்கல்லாக இந்த நியமனம் பார்க்கப்படுகிறது.

வசந்தி முருகேசுவின் இந்த சாதனை, விமானப் பாதுகாப்புத் துறையில் மேலும் பல பெண்கள் முன்னேறுவதற்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version