நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இருந்து அல்லது சிறைக் காவலில் இருந்து கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் ஆயிரத்து181 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
இவர்களில் 472 பேர் மட்டுமே பின்னர் மீளக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 709 கைதிகள் தங்களது தண்டனைக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யாமல் இதுவரை கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருப்பதாகவும் கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், சிறைச்சாலைகளுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் காணப்படுவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டில் நாட்டின் 22 சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது ஐயாயிரத்து 83 கைத்தொலைபேசிகள், நாலாயிரத்து 149 சிம் அட்டைகள் மற்றும் இரண்டு ஆயிரத்து 432 மின்கலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
,
தப்பியோடிய கைதிகள் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பதும், சிறைச்சாலைகளுக்குள் கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் தடையின்றி கிடைப்பதும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என கணக்காய்வாளர் அலுவலகம் எச்சரித்துள்ளது.

ஊடகவியலாளர்களுக்கான போதைபொருள் தடுப்பு செயலமர்வு!
மூத்த அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் காலமானார்!
தியாகி திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் – யாழ். மாநகர சபை உறுப்பினர் கபிலன் வேண்டுகோள்!
சிரந்தி ராஜபக்சவிற்கு 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!