இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல்:ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு!

சர்வதேச எரிபொருள் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக ஈரானின் மத்திய இராணுவக் கட்டளை தலைமையகம் அறிவித்துள்ளது.

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய உயிராபத்தான தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த அறிவித்தலை ஈரான் விடுத்துள்ளது.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்கள், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே எட்டப்பட்ட தற்காலிக உடன்படிக்கையின் ஒரு அங்கமாக லெபனானில் போர்நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டது.

அதன்பின்னரான சில மணித்தியாலங்களில், லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் நடாத்திய வான்வழித் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்திருந்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad
↑
Exit mobile version