உலக கிண்ண உதைபந்தாட்ட தகுதிச் சுற்றின் இறுதிப்போட்டிக்கு இத்தாலி தெரிவு!

உலகக் கிண்ண உதைபந்தாட்ட தகுதிச்சுற்றின் அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு இத்தாலி அணி முன்னேறியுள்ளது.

உலகக் கிண்ண தகுதிச்சுற்றின் அரையிறுதிப் போட்டியில், இத்தாலி மற்றும் வடக்கு அயர்லாந்து அணிகள் மோதின.

பெர்காமோவில் நடந்த இந்தப் போட்டியில், முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல்கள் எதையும் போடமுடியவில்லை.

இரண்டாம் பாதியில் இத்தாலியின் சான்ட்ரோ டோனலி 56வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

அதன் பின்னர் 80ஆவது நிமிடத்தில் இத்தாலியின் மொய்ஸ் கீன் (Moise Kean) பிறிதொரு கோலை போட்டார்.

போட்டிநேர முடிவுவரை வட அயர்லாந்து அணியால் கோல்கள் எதனையும் போடமுடியவில்லை.

அதற்கமைய, இத்தாலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஏப்ரல் முதலாம் திகதி நடைபெறவுள்ள 2026 உலகக்கிண்ண தொடரின் தகுதிச் சுற்றின் இறுதிப் போட்டியில் போஸ்னியா அணி மற்றும் இத்தாலி அணிகள் மோதவுள்ளன.

Exit mobile version