க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான தமிழ் மற்றும் கணித பாடங்களுக்கான விசேட செயலமர்வு சிகரம் நிறுவனத்தின் அனுசரணையோடு செம்பியன்பற்று தெற்கு, வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக் கல்வி நிலையத்தில் இடம்பெற்றது.


இந்தச் செயலமர்வில் கணித பாட விரிவுரையாளராக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மென்பொருளியலாளர் பட்டதாரியான வினித், தமிழ்ப்பாட வளவாளராக சிகரம் கல்வி நிறுவனத்தின் இணைப்பாளரும் தமிழ் ஆசிரியருமான கு.உதயபாஸ்கரன் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

இந்தச் செயலமர்வில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி முதல் க.பொ.த. சாதாரணபரீட்சை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழுக்கு 20 க்கு 20 உலக கிண்ணம் கொண்டுவருகை!
இணுவில் கந்தன் ஆலயத்தில் பாற்குட பவனி!
நடனத்துறையில் பிரகாசித்துவரும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த றெஜிஸ்ரிகா!
சாவகச்சேரி நகராட்சி மன்றமும்,கைத்தொழில் வணிகர் மன்றமும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா!