சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது – இரு உழவு இந்திரங்கள் கைப்பற்றல்!

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதோடு இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அரியாலை இன்று(02) அதிகாலை விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்கள் இரண்டு கைப்பற்றப்பட்டதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version