சிம்பாவே மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்குடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றிவுள்ளது.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சிம்பாவே மகளிர் அணி, 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது.


இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து மகளிர் வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில், 3ஆவது ஒரு நாள் போட்டி நேற்று(11) இடம்பெற்றது.


இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து, 303 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 304 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி
27.1 ஓவர்களில் அனைத்து விக்கட்களையும் இழந்து 103 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
அதனடிப்படையில் , நியூசிலாந்து மகளிர் அணி, 200 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைவியாக ஸ்மிருதி மந்தனா நியமனம்!
செங்கடல் கரையோரத்தில் யேமன் அரசுப் படைகள் இராணுவ நடவடிக்கை!
ஆசிய கிண்ண ஆண்கள் 4×100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி!
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்காவிற்கு ஈரான் நிபந்தனை விதித்தது!