தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பிலுள்ள கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று (13) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வந்ததையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூலை 2 ஆம் திகதி முதல் சுமார் இரண்டு வாரங்களுக்கு குறித்த பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பல்கலைக்கழகம் மீண்டும் இன்று திறக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கலாநிதி சானி இம்புல்கொட தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடு முழுவதும் இந்த ஆண்டில் 68,071 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதே காலகட்டத்தில் டெங்கு தொடர்பான 47 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தாய்லாந்து – பேங்கொக்கில் மதுபானக்கடையில் தீ விபத்து : 27 பேர் பலி: பலர் காயம்!
தமிழ் மற்றும் முஸ்ஸிம் கட்சிகள் கொழும்பில் உடன்படிக்கை கைச்சாத்து!
பலாலி மக்கள் காணிகளை விடுவிக்ககோரி 4 ஆவது ஞாயிறாகவும் போராட்டம்!
யாழ்.உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிப்பு!