இலங்கைஉலகம்குற்றவியல்
Trending

நாடாளுமன்ற தகவல் அமைப்புகள் மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தின் பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கை சபாநாயகரால் இன்று (04) சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்துவதற்கு 2025 ஜூலை 25 அன்று நாடாளுமன்ற ஊழியர் ஆலோசனைக் குழு தீர்மானித்திருந்தது.

இதற்கமைய, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் சுஜாதா அழகப்பெருமவால் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

அவர் தனது இறுதி அறிக்கையை 2025 நவம்பர் 24 அன்று சபாநாயகரிடம் கையளித்திருந்தார்.

நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் தீர்மானத்திற்கமைய, இந்த அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாகச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும்,அதன் பிரதி ஒன்று நாடாளுமன்ற நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button