நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கும், பேரழிவிற்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் தொடங்கப்பட்ட இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிதிக்கு பொலிஸ் திணைக்களம் 50 மில்லியன் ரூபா பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது.
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்கவிடம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று(06) இந்த நிதியைக் கையளித்தனர்.
பொலிஸ் பணியில் இருக்கும் உத்தியோகத்தர்கள் தங்கள் சம்பளத்திலிருந்து நன்கொடையாக வழங்கிய பணம் இந்தக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.

தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மரதன்!
கந்தளாய் வைத்தியசாலை முன்பாக மரம் முறிந்து வீழ்ந்ததால் வாகனங்கள் சேதம்!
வடக்கு புதையிரத பாதை மூன்று மாதங்கள் மூடல்!
கிளிநொச்சியில் குளங்கள் வான் பாய்கின்றன!