ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (16) இரவு முதல் நடைமுறையாகும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை இன்று முதல் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் காரணமாகவே, பால் தேநீர் விலையையும் இவ்வாறு குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்களும் தற்போது கிடைக்கப்பெறும் இந்த சலுகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் ஹர்ஷ ருக்ஷான் வலியுறுத்தியுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மா பொதியானது 125 ரூபாவினாலும், 400 கிராம் பொதியொன்றின் விலையை 50 ரூபாவினாலும் இன்று முதல் குறைப்பதற்கு இறக்குமதியாளர்கள் இணக்கம் வௌியிட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு: சாணக்கியன் எம்பியை வெளியேற்றுவதாக சபாநாயகர் எச்சரிக்கை!
க.பொ.த. சாதாரண தர அழகியல் பாட செய்முறை பரீட்சை 22 முதல் ஆரம்பம்!
அதிஷ்ட லாப சீட்டில் வெல்லப்பட்ட அதிகூடிய தொகை வழங்கி வைப்பு!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 16 ஆவது போட்டி இன்றிரவு!