பல்வேறு சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளின் இராஐதந்திரிகள், யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றும் பெண் அரசியல் தலைவர்களை சந்தித்து நேற்று (26) கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர், மாலைதீவு உயர்ஸ்தானிகர் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் UNDP துணை வதிவிடப் பிரதிநிதி ஆகியோரே குறித்த கலந்துரையாடலை முன்னெடுத்தனர்.

இதன்போது திறந்த மற்றும் சிந்தனைக்கான இடத்தை உருவாக்கல், பெண்களின் தலைமை பற்றிய உரையாடல், பொது அலுவலகங்களில் பெண்கள் நுழைவதற்கும் மற்றும் நிலைநிறுத்துவதற்கும் பெண்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் தடைகளை விவாதங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது பெண்களின் அரசியல் பங்கேற்பை முன்னேற்றுவதற்கு ஒத்துழைப்புக் கூட்டாண்மை மூலம் ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


தியாகி திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் – யாழ். மாநகர சபை உறுப்பினர் கபிலன் வேண்டுகோள்!
சிரந்தி ராஜபக்சவிற்கு 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செங்கடல் கரையோரத்தில் யேமன் அரசுப் படைகள் இராணுவ நடவடிக்கை!
குருக்கள்மடம் சந்தேக மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணி ஆரம்பம்!