யாழ்ப்பாணம் – குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (02) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மடுமாதா தோவாலய யாத்திரைக்காக புறப்படும்போது பட்டாசுகள் கொளுத்தப்பட்டன.
அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்த நிலையில், அதனை மீண்டும் வெடிக்க செய்வதற்கு குறித்த இளைஞர் முற்பட்டுள்ளார்.
இதன்போது அந்த பட்டாசு திடீரென வெடித்ததில் அவர் பலத்த காயமடைந்து அதன்பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் நகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்தபிரதி அமைச்சர் எரங்க குணசேகர!
வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கில் முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவு!
சவூதி அரேபியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹூதி அமைப்பு!
எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!