‘நாட்டிய கலாபமயில்’ விருது பெற்ற மகிழினி குமணன்!

கிளிநொச்சி மகாவித்தியாலய நடன ஆசிரியர் திருமதி மகிழினி குமணன், ‘நாட்டிய கலாபமயில்’ விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை சிதம்பரேஸ்வரம் நடனாலயமும், இந்திய கோயம்புத்தூர் குருகுலக் கல்வி நிலையமும், இணைந்து நடாத்திய இலங்கை நாட்டியாஞ்சலி நிகழ்வு, வவுனியா மாவட்டச் செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது,கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவியர்கள் ‘ஈழத்தின் செல்வம் – இலங்கை நாட்டியாஞ்சலி’ என்ற தலைப்பில் நடன ஆற்றுகையை நிகழ்த்தினர்.

இந்த நிகழ்வு குறித்த நடன ஆற்றுகை நிகழ்வு பார்வையாளர்களையும், நடுவர்களையும் கவர்ந்திருந்தது.

இந்நிலையில்
மாணவியர்களுக்குப் பயிற்சியளித்து வழிநடத்திய ஆசிரியர் திருமதி மகிழினி குமணனுக்கு ‘நாட்டிய கலாபமயில்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இதேவேளை, கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இவ்வாரம் நடைபெற்ற நிகழ்விலும் ஆசிரியரும், மாணவியர்களும் பாடசாலைச் சமூகத்தால் கௌரவிக்கப்பட்டனர்.

Swing Ad
Tamil World Radio Ad
↑
Exit mobile version