பிரான்ஸில் கல்வித் துறையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்றுவரும் போராட்டங்களில் அதிகளவான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.



சுமார் ஐந்து இலட்சத்து 50 ஆயிரம் பேர் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தொடர் வன்முறைகள் பதிவாகியுள்ளன.
இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 1,200 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதை பிரான்ஸ் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
தலைநகர் பாரிஸ் மற்றும் பல முக்கிய நகரங்களில் கலகத் தடுப்புப் பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தீவிர மோதல்கள் நீடித்து வருகின்றன.
கூட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
வன்முறையில் ஈடுபட்ட குழுக்கள் கட்டடங்கள், மற்றும் வாகனங்களை தாக்கி தீக்கிரையாக்கியுள்ளன.
ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் மேல்நிலைப் பாடசாலைகளின் பராமரிப்பின்மை போன்ற பிரச்சினைகளை முன்வைத்துத் தொடக்கத்தில் மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், பின்னர் தொழிற்சங்கங்களும், ‘மஞ்சள் சட்டை’ இயக்கமும் இணைந்துகொண்டுள்ளன.

செங்கடல் கரையோரத்தில் யேமன் அரசுப் படைகள் இராணுவ நடவடிக்கை!
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்காவிற்கு ஈரான் நிபந்தனை விதித்தது!
துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
சவூதி அரேபியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹூதி அமைப்பு!