அமெரிக்கா தனது இராணுவ முற்றுகையை நீக்கினால், 7 நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
சுமார் 7 மாதங்களாகப் போர் நீடித்து வரும் நிலையில், ஹோர்மூஸ் நீரிணையை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது.
ஈரானும் தடையை மீறி ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய்க் கப்பல்களை தாக்கி வருகின்றது.

இதனால், சர்வதேச அளவில் கடும் பொருளாதார நெருக்கடி அதிகரித்திருக்கும் சூழலில், ஹோர்மூஸ் நீரிணையில் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் மீதான பொருளாதார தடையை கடுமையாக்க போவதாக ட்ரம்ப் அண்மையில் மிரட்டல் விடுத்திருந்தார்.
மேலும், இன்று (23) முதல் ஈரானின் விமானப் போக்குவரத்து சேவையை முடக்கப் போவதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்கொட் பெசென்ட் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
சவூதி அரேபியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹூதி அமைப்பு!
பயணிகளோடு காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு: 140 பேர் மாயம் :ஒருவர் பலி!
ஆசிய மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை – இந்திய அணிகள் இன்று களத்தில்!