நிவாரணங்கள் வழங்கவும் ஏற்பாடு!
யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி,வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து இன்று (03) கலந்துரையாடினார்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மூன்று கட்டங்களில் வழக்கமான இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக துணைத்தூதுவர், சாய்முரளி தெரிவித்தார்.
உடனடி உதவிகள், மீள்கட்டுமான உதவிகள், நிரந்தரத் கட்டுமாணங்கள் என மூன்று கட்டங்களில் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண மக்களுக்கான தற்போதைய உடனடித் தேவைகளின் பட்டியலை வழங்கினால், உதவிகளை விரைந்து வழங்க முடியும்.
உலகளாவிய காலநிலை மாற்றத்தால் அடிக்கடி நிகழக்கூடிய இத்தகைய இடர்பாதிப்புகளைத் தணிப்பதற்கான நிரந்தரக் கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது போன்று இங்கும் உருவாக்குவதற்கான உதவிகளையும் எதிர்காலத்தில் வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பின்போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை!
சுற்றுலா மேம்பாட்டுப் திணைக்களத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பஷில் ராஜபக்ஷவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு!
யோஷித ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று ஆஜராக முடியாது சட்டத்தரணிகள் ஊடாக யோஷித பதில்!