அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்றிரவு (01) விசேட உரையாற்றவுள்ளார்.
வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லெவிட் (Karoline Leavitt) இததனை அறிவித்துள்ளார்.
ஈரானுடனான தற்போதைய நிலைவரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி “முக்கியமான புதிய தகவல்களை நாட்டு மக்களுக்கு வழங்குவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உரை அமெரிக்க நேரப்படி இரவு 9 மணிக்கும்,இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 06:30 மணியாகும் இடம்பெறவுள்ளது.
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், போர் நிறுத்தம் அல்லது ஈரானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவது குறித்த தீர்க்கமான அறிவிப்புகள் இந்த உரையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உக்ரைனின் வணிக வளாகத்தின் மீது ரஷ்யா நடாத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 5 பேர் பலி: 67 பேர் காயம்!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!
ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்துப்பேச அமெரிக்காவிற்கு அருகதை இல்லை: ஈரானிய துணை ஜனாதிபதி சீற்றம்!