ஈரான் மூடியுள்ள ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக அமெரிக்கா நடத்தி வரும் வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களுக்கு, பிரித்தானியா தனது இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.
சைப்பிரஸிலுள்ள அக்ரோதிரி வான்படைத் தளம் மற்றும் இந்தியப் பெருங்கடலிலுள்ள டியாகோ கார்சியா தளம் ஆகியவை இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பிரித்தானியாவின் இந்த முடிவுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தாக்குதல்களுக்குத் தளங்களை வழங்குவதன் மூலம், பிரித்தானியாவும் இந்தப் போரில் ஒரு நேரடிப் பங்காளியாக மாறிவிட்டதாக ஈரான் எச்சரித்துள்ளது.
இதனால் பிரித்தானியாவின் சொத்துக்கள் மற்றும் தளங்கள் ஈரானின் இலக்குகளாக மாறக்கூடும் என்றும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நேட்டோ நாடுகளை “கோழைகள்” என்று விமர்சித்த பின்னணியில் பிரித்தானியாவின் இந்த நகர்வு முக்கியத்துவம் பெறுகிறது.
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய அனைத்து நட்பு நாடுகளும் இராணுவ ரீதியாக உதவ வேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – ஜனாதிபதி உறுதி!
எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று நாட்டுக்கு வருகை!
தென்னாபிரிக்கா நியூசிலாந்து இடையிலான 3ஆவது T20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி!
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு!