யாழ்.கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாலிப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்களை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியதோடு சாரதி ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(29) அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் கட்டுப்பாட்டை மீறி பொலிஸாருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய உழவு இயந்திரம் மீது கடந்தவாரம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக பொலிஸார் இன்று அதிகாலை குறித்த பகுதிகளில் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன்போதே சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்களைக் கைப்பற்றப்பட்டதோடு ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மணல் அகழ்வில் ஈடுபட்ட ஏனையவர்கள் தப்பியோடியுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வீதியைப் புனரமைக்காமைக்கு விளக்கமளிக்க முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பணிப்பு!
யாழ்.பல்கலையில் மாவீரர் தின ஆரம்ப நிகழ்வு!
புலிக்கொடியை அங்கீகரித்த கனடாவின் பிரம்டன் நகரம்!
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்ல ஆரம்பநாள் நினைவேந்தல்!