யாழில் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

யாழ்ப்பாணத்தில் போதைபொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்று(22) கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு கிராம் 120 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர் நல்லூர் மூத்த விநாயகர் கோவிலடியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version