அனர்த்தம் காரணமாக, 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் சில பாடங்களுக்குத் தோற்ற முடியாமல் போன மாணவர்களுக்கான பரீட்சைகள், இம்மாதம் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்தங்களால் நாட்டின் பல பாகங்களிலும் பரீட்சை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
இக்காலப்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பரீட்சைகளுக்குச் சமூகமளிக்க முடியாத மாணவர்களுக்காகவே இந்த புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக அறிந்துகொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐந்து பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
அனர்த்தத்தால் வீடுகளை இழந்தவர்களுக்குபுதிய வீடுகளை அமைக்கும் பணிகள் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்!
குப்பைக்காடாக காட்சியளிக்கிறது வடமராட்சி கடற்கரை
கரவெட்டியில் 21 பவுண் தங்க நகை கொள்ளை!